Friday, October 22, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1

ஆசிரியர் அறிமுகம் :

இந்த இடுகையின் விருந்து ஆசிரியர் பலரும் மிக நன்கு அறிந்த ஒரு வலைப்பதிவாளர்.

அவரை நான் கபீரண்ணன் என்று அழைப்பது உண்டு. :))
அவருடைய வலைப்பூ கபீரின் கனிமொழிகள் வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர் என்பது மட்டுமல்ல, எழுதும் திறத்திலும் அவர் என்னை விட கைத்தேர்ந்தவர். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தீர்த்து விடுவார்.

தற்போது பழந் தமிழிலக்கியங்களில் திருமால் பற்றிக் காணப்படும் குறிப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் தனித்தனியாக பதிந்து வருகிறார்.

இவைகளினால் நம் இதிகாசகங்கள் எவ்வளவு தொன்மையானது என்பதும் இந்நாட்டு மக்களின் மனதில் எப்படி இரண்டறக் கலந்து உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நல்ல திறனாய்வு.

இயல்பான பேச்சு வழக்கைப் பயன்படுத்தி அதில் நகைச்சுவை இழையோடும் வகையில் கருத்துகளை வழங்கும் திறமைதான் அவருக்கு மிகப்பெரும் வாசகர் வட்டத்தைத் தேடித் தந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

தமிழ்மணம் நடத்திய சிறந்த ஆன்மீக இடுகைக்கான போட்டியில் பெரும்பாலோர் வாக்குகளைப் பெற்று பரிசைத் தட்டிச் செல்பவர் என்பதே அதற்கு சான்று.

அவருடைய வலைப்பூவின் பெயர் மாதவிப்பந்தல். (The cat is out of the bag !!!)இதைத் தவிர இவர் பங்கேற்கும் பிற வலைப்பூக்கள் முருகனருள், ஆச்சார்ய ஹ்ருதயம், அம்மன்பாட்டு. இவை நானறிந்தவை, அறியாதவை எவ்வளவோ ! :)

ஆம், அன்பர்களே, வெகுவான வாசகர்களின் அபிமானம் பெற்ற

கே.ஆர்.எஸ் என்னும் Kannabiran Ravishankar

இந்த சிறப்பு இடுகை வழங்குகிறார்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஒரு இடுகையை தயாரித்து சிறப்பு ஆசிரியராக ஒரு பதிவு வழங்க கே.ஆர்.எஸ். முன்வந்திருப்பது கபீர் வலைப்பூவின் அதிருஷ்டம் . 2007 ஆம் வருடத்திலிருந்தே இவர் நடத்திவரும் புதிரா -புனிதமா கேள்வி பதில் பாணியில் இம்முறை கபீரை எடுத்துக் கொண்டிருக்கிறார். வாசகர்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாறுதலாக இருக்கும்.

அவருக்கு மனமார்ந்த நன்றி. இது வெறும் கேள்வி பதில் அல்ல, அவர் ஆசிரியர் மட்டும் அல்ல. இது ஒரு சின்ன போட்டி அதற்கு அவர் நடுவரும் கூட. போட்டி மற்றும் பரிசு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனி கே.ஆர். எஸ் பேசுவார்.

கபீர் என்பவர்...

கவிஞரா? ஆன்மீகவாதியா?
தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
சாஸ்திர விற்பன்னரா?
சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
கபீரின் தோஹா என்னும் ஈரடி இந்திக் குறள் தொடர்ந்து இந்தப் பதிவில் பரிமளிக்கத் தான் போகிறது!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர் மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல! அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!


Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!

முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் மிக விரும்பும் வலைப்பூவில்! இதோ!

புதிரா? புனிதமா?? = கபீர்!


1

கபீரைப் போலவே இவரும் ஒரு நெசவாளி ? யார் இவர்?

அ) திருநீலகண்டர்

ஆ) நேச நாயனார்

இ) அமர்நீதி நாயனார்

ஈ) தண்டி அடிகள்

2

கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்?

அ) குரு ராம் தேவ்

ஆ) குரு கோவிந்த் சிங்

இ) குரு நானக்

ஈ) குரு அர்ஜூன் தேவ்

3

கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்?

அ) துளசி தாசர்

ஆ) ஜெய தேவர்

இ) இராமனந்த தீர்த்தர்

ஈ) துக்கா ராம்

4

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;"
என்று துவங்கும் ஒரு தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ?

அ) சேக்கிழார்


ஆ) நம்மாழ்வார்


இ) பாரதியார்


ஈ) கம்பர்


5

கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

அ) சிறப்பானவரின் பக்தர்

ஆ)கடவுளின் அடிமை

இ) சிறப்பானவரின் அடிமை

ஈ) கடவுளின் காதலர்

6

கபீரின் சொந்த ஊர் எது?

அ) காசி

ஆ) கயா

இ) கோரக்பூர்

ஈ) கோலாப்பூர்

7

கபீரின் சமாதி எங்கு உள்ளது?

இவ்வளவு பெரிய மகானின் உடல் மீது இந்து முஸ்லீம் பிரச்சனை எழ, துணியை விலக்கிய போது, ரோஜாக்கள் மட்டுமே இருந்தன என்பது வழக்கு! ஒரு பகுதி ரோஜாக்களை எரித்தார்கள்! இன்னொரு பகுதி ரோஜாக்களைப் புதைத்தார்கள்! இன்றும் சமாதியில், அடக்கமான இடம்/சாம்பலான இடம் என்று இரண்டுமே உள்ளது!

அ) மகர், கோரக்பூர்

ஆ) காசி (வாரணாசி)

இ) பத்ராச்சலம்

ஈ) பண்டரிபுரம்


8

கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது! வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!

இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக கொடுத்தனர்?

அ) காசி மகாராஜா

ஆ) குவாலியர் மகாராஜா மான்சிங்

இ) சிக்கந்தர் லோதி

ஈ) அவுரங்கசீப்

9


கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா? அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா?


அ) ஆம்


ஆ) இல்லை

10

இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"சொன்னது யார் ?

அ) ஏசுபிரான்
ஆ) முகம்மது நபிகள்
இ) புனித தாமஸ்
ஈ) இக்னேஷியல் லயோலா


எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கும் முதல் இரண்டு வாசகர்களுக்கு பரிசு உண்டு.

ராமகிருஷ்ண ஆசிரமத்தின் வெளியீடுகளில் (online e-store ) ரூ 250 மதிப்பிற்கு புத்தகங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்குள்- ரா.கி.மி கட்டுதிட்டங்களுக்குட்பட்ட விலாசத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் விடைகள் -இந்திய நேரப்படி 24 ஆம்தேதி மாலை 6 மணிக்குள் -பின்னூட்டப்பெட்டி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

எவையேனும் தவறு என்று கருதி மாற்று விடைகளை அளித்தால் பின்னர் இடும் பின்னூட்ட சமயமே கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தகுதியான காரணங்கள் இருந்தால் பரிசுத் தொகை இருவருக்கும் மேற்பட்ட பேர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படலாம். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

பங்கேற்கும் அனைவருக்கும் கூட ஒரு பரிசு உண்டு. அது பின்னர் தெரிவிக்கப்படும்.
---------------------------------------------------------------------

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?

27 comments:

  1. மிகச் சுவாரஸ்யமான போட்டி - பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, கபீரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரு சின்ன பயணம் போய்வர வைத்துவிட்டது - பாராட்டுகள் & நன்றிகள்.

    சரியான விடைகளாக நான் நினைப்பவை:

    1. ஆ. நேச நாயனார்
    2. ஈ. குரு அர்ஜுன் தேவ்
    3. இ. இராமானந்த தீர்த்தர்
    4. ஈ. கம்பர்
    5. இ. சிறப்பானவரின் அடிமை
    6. அ. காசி (இந்த நான்கு விடைகளுமே சரியானதாகச் சொல்லமுடியவில்லை. அவர் காசியில் வாழ்ந்தவர் என்பதால் இதைத் தேர்வு செய்திருக்கிறேன்)
    7. அ. மகர், கோரக்பூர்
    8. இ. சிக்கந்தர் லோடி (யார் போட்டுக்கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த அரசன்தான் கபீரை ரொம்பப் ‘படுத்தி’யதாகப் படித்திருக்கிறேன்!)
    9. ஆ. இல்லை
    10. அ. ஏசுபிரான் (Matthew 16:26)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. 1 நேச நாயனார்
    3 ராமானந்த தீர்த்தர்
    4 கம்பர்
    8 காசி மகாராஜா
    10 இயேசு பிரான்

    ReplyDelete
  3. 1. Ans:ஆ) நேச நாயனார்
    2. Ans:- இ) குரு நானக்
    3. Ans:- ஈ) துக்கா ராம்
    4. Ans: ஈ) கம்பர்
    5. Ans:- இ) சிறப்பானவரின் அடிமை
    6. Ans: ஈ) கோலாப்பூர்
    7. Ans:- ஆ) காசி (வாரணாசி)
    8. Ans:- ஈ) அவுரங்கசீப்
    9. Ans:- அ) ஆம்
    10. Ans:- இ) புனித தாமஸ்

    .ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?:)

    அவர்மேல் வைத்திருக்கும் அன்பின் அடையாளம்)

    ReplyDelete
  4. பங்கு பெற்றுப் பரிசு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். கடைசிக் கேள்வியைத் தவிர மற்றவற்றிற்கு விடை சரி பார்த்துட்டேன். கடைசிக்கேள்விக்கு அப்புறமா இதிலே வந்ததும் பார்த்துக்கறேன்.

    ReplyDelete
  5. சரியான விடைகளுக்கான கெடுவு தேதி தவறுதலாக 25 ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அது 24 ஆம் தேதி ஞாயிறு என்பதாக திருத்திக் கொள்ளவும். தவறுக்கு மன்னிக்கவும். (இப்போது இடுகையிலும் திருத்தப்பட்டுவிட்டது )

    இன்னும் 48 மணி நேரம் இருக்கிறது. ஆற அமர யோசித்து விடையளிக்கவும்.

    ReplyDelete
  6. எனக்கில்ல பரிசு..
    வேடிக்கை பார்க்கிறேன். பதில்கள் ஒவ்வொன்றையும் விளக்கி வரப்போகும் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.:)

    ReplyDelete
  7. 1.ஆ) நேசநாயனார்
    2.ஈ) குரு அர்ஜீன்தேவ்
    3.இ) இராமானந்த தீர்த்தர்
    4.ஈ) கம்பர்
    5.இ) சிறப்பானவரின் அடிமை
    6.அ) காசி
    7.அ) மகர், கோரக்பூர்
    8.இ) சிக்கந்தர் லோதி
    9.ஆ) இல்லை
    10.அ) இயேசுபிரான்

    -முகிலரசி

    ReplyDelete
  8. 1. ஆ) நேச நாயனார்
    2. ஈ) குரு அர்ஜூன் தேவ் (Thanks Google)
    3. இ) இராமனந்த தீர்த்தர்
    4. ஈ) கம்பர் (Thanks Jeyamohan, Google)
    5. இ) சிறப்பானவரின் அடிமை (Thanks Google)
    6. அ) காசி (Thanks Google, though I needed to dig)
    7. ஆ) காசி (வாரணாசி) (Thanks Google)
    8. இ) சிக்கந்தர் லோதி (Thanks Google)
    9. ஆ) இல்லை
    10. அ) ஏசுபிரான்

    Dont know the answer for the extra question. Google also doesn't help. :-(

    ReplyDelete
  9. புதிரா?புனிதமா??-கபீர்.
    ---------------------

    விடைகள்:

    1.ஆ. நேசநாயனார்

    2.ஈ. குரு அருஜுன்தேவ்

    3.இ. இராமானந்த தீர்த்தர்

    4.ஈ. கம்பர்

    5.இ. சிறப்பானவரின் அடிமை

    6.அ. காசி(வாரணாசி)

    7.அ. மகர்( கோரக்பூர்)

    8.இ. சிக்கந்தர் லோதி

    9.ஆ. இல்லை

    10.அ. ஏசுபிரான்

    மாதவி பந்தல் ஆசிரியருக்கு வணக்கம்.

    கேள்விகளுக்கு பதில் எனக்கு தெரிந்தவரை எழுதி விட்டேன்

    நன்றி.

    ReplyDelete
  10. உங்கள், கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர்
    வலைப்பூ திரு.ரவிஷங்கர் அவ்ர்களுடையது. அதனால் அவரை கபீர் அண்ணன் என்று கூப்பிடுகிறீர்கள் சரியா?

    ReplyDelete
  11. வாங்க கோமதி மேடம்,

    உங்க விடைகள் எல்லோரோட விடைகளோட கொஞ்சம் வெயிட்டிங்.

    //கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர்
    வலைப்பூ திரு.ரவிஷங்கர் அவ்ர்களுடையது ///

    அதை நானே சொல்லி விட்டுதானே இன்னொரு காரணம் கேட்டிருக்கேன் :))

    ஆர்வத்துடன் பங்கேற்பதற்கு நன்றி

    ReplyDelete
  12. ஆகா, கே.ஆர்.எஸ் இங்கேயும் புதிரைப் போட்டுட்டாரா! பந்தலில் தொடுப்பும் கொடுத்துட்டார். நல்லது அது தேனீக்களை கொண்டு வந்து சேர்க்கட்டும்!

    ReplyDelete
  13. என்னோட முயற்சி:
    1. ஆ) நேச நாயனார்
    2. இ) குரு நானக்
    3. இ) இராமனந்த தீர்த்தர்
    4. ஈ) கம்பர்
    5. இ) சிறப்பானவரின் அடிமை
    6. அ) காசி
    7. அ) மகர், கோரக்பூர்
    8. இ) சிக்கந்தர் லோதி
    9. ஆ) இல்லை
    10. அ) ஏசுபிரான்

    ReplyDelete
  14. கண்ணனை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. பதிலெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கறேன் :)

    ReplyDelete
  15. ஆகா! இவ்ளோ நடந்திருக்கா இங்கன போட்டியில? இருங்க ஒவ்வொன்னாப் பார்த்துட்டு வாரேன்! :)
    அடியேன் பதிவையும் ஒரு பொருட்டாய் இங்கு இட்டமைக்கு நன்றி கபீரன்பன்! :))

    ReplyDelete
  16. இங்கேயும் முடிவினை நான் தான் அறிவிக்கணுமா என்ன? ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்-ன்னா விடமாட்டேங்கிறாங்க-ப்பா! :)

    சரியான விடைகளைச் சொன்னவர்கள்
    நா.சொக்கன்
    முகிலரசி
    கோமதி அரசு

    வாழ்த்துக்கள் மூவருக்கும்! :)
    வர்ட்டா?
    ஆஆஆஆ என்ன பரிசா?
    புலவரே...மன்னர் (கபீரன்பன்) அங்கு இருக்கிறார்! பார் வேந்தே, இவர்களைப் பார் வேந்தே!! :)

    ReplyDelete
  17. மற்ற அன்பர்களும், இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு முடிந்த அளவு முயற்சித்து இருக்காங்க!

    புதிரா புனிதமாவில்-வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை! நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க! இருந்தாலும், இங்கு வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து, விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! பொதுப் பரிசும் உங்களுக்கு உண்டு! :)

    @LK 13410 cheri = 4/10
    @Narasimmar 145 cheri 3/10
    @kumaran 7 mattume thavaRu = 9/10
    @jeeva 2 mattume thavaRu = 9/10
    வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  18. //nchokkan said...
    ಮಿಕಚ್ ಚುವಾರಸ್ಯಮಾನ ಪೋಟ್ಟಿ - ಪರಿಚು ಕಿಟೈಕ್ಕಿಱತೋ ಇಲ್ಲೈಯೋ, ಕಪೀರಿನ್ ಒಟ್ಟುಮೊತ್ತ ವಾೞ್ಕ್ಕೈಯೈಯುಮ್ ಒರು ಚಿನ್ನ ಪಯಣಮ್ ಪೋಯ್ವರ ವೈತ್ತುವಿಟ್ಟತು//

    ಚೊಕ್ಕನ್, ವಾಙ್ಕ, ನಲಮಾ?
    ನೀಙಕ ಚೊನ್ನತೇ ತಾನ್! ಕಪೀರಿನ್ ವಾೞ್ಕ್ಕೈಯೈ ಎಟ್ಟಿಪ್ ಪಾರ್ಕ್ಕುಮ್ ಮುಯಱ್ಚಿಯೇ ಇತು! ತನಿಯಾ ಎಟ್ಟಿಪ್ಪಾರ್ತ್ತಾ ಪೋರಟಿಕ್ಕುಮ್! ಅತಾನ್ ಒಙ್ಕಳೈ ಎಲ್ಲಾಮ್ ತುಣೈಕ್ಕು ಕೂಪ್ಪಿಟ್ಟು ಎಟ್ಟಿಪ್ ಪಾರ್ತ್ತೋಮ್! :)

    ReplyDelete
  19. //nchokkan said...
    மிகச் சுவாரஸ்யமான போட்டி - பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, கபீரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரு சின்ன பயணம் போய்வர வைத்துவிட்டது//

    வாங்க சொக்கன், நலமா?
    நீங்க சொன்னதே தான்! கபீரின் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பது தான் நோக்கம்! என்ன தனியா பார்த்தால் போரடிக்கும்! அதான் ஒங்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு, கூட்டா எட்டிப் பார்க்கிறோம்! :)

    ReplyDelete
  20. @கீதாம்மா - பாக உன்னாரா? நீங்க ஆட்டம் ஆடலையா? ஆச்சரியங்கா உந்தி! :)

    @முத்தக்கா - பரிசு உங்களுக்கு இல்லையா, யார் சொன்னா? பொதுப் பரிசை வலைப்பூவில் கொடுப்பாரு பாருங்க நம்ம கபீரன்பன்!

    ReplyDelete
  21. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    ஆகா, கே.ஆர்.எஸ் இங்கேயும் புதிரைப் போட்டுட்டாரா!//

    கடை விரித்தேன்! கொண்டு விட்டார் கபீர்! :)

    //பந்தலில் தொடுப்பும் கொடுத்துட்டார். நல்லது அது தேனீக்களை கொண்டு வந்து சேர்க்கட்டும்!//

    தேனீக்கள் வார இறுதியில் ரெஸ்ட் எடுக்கும்! தேன் குடிக்காது! :)

    @கவிக்கா
    பதிலை எல்லாம் சொல்லணும்! நீங்க பிட் அடிக்கப் பார்க்கறீங்க! அதுவும் பரீட்சை முடிஞ்ச பொறவு! :)

    ReplyDelete
  22. @கோமதி அரசு
    //உங்கள், கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர்
    வலைப்பூ திரு.ரவிஷங்கர் அவ்ர்களுடையது. அதனால் அவரை கபீர் அண்ணன் என்று கூப்பிடுகிறீர்கள் சரியா?//

    அவரு கூட சேர்ந்து நீங்களும் காமெடி பண்ணறீங்களே! ஞாயமா? :)

    நான் பிளாக்கர் கணக்கு துவங்கியது-ன்னு காட்டுற வருசத்தை நம்பாதீக! அது சும்மா Open and Sleep! :)
    பதிவை 2007-இல் இருந்து தான் எழுதத் துவங்கினேன்!
    ஆன்மீக சூப்பர் ஸ்டார் குமரன் அண்ணா தான் God Father! :)

    தோழன் இராகவன் தந்த ஊக்கமும் ஆக்கமும் ஒரு பெரிய உந்துதல்! மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது! மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன்! :)

    ReplyDelete
  23. @கேஆரெஸ், ஆட்டம் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேன். கடைசிக் கேள்விக்குத் தான் பதில் தெரியலை, சந்தேகம், அதையும் இப்போத் தெரிஞ்சுண்டாச்சு! எனக்கு என்ன பரிசு???

    ReplyDelete
  24. ரவிஷங்கர்,அப்பாவி சிறுவனா நீங்கள்?

    எல்லோரையும் சிந்திக்கவும்,தியனிக்கவும்
    வைக்கும் நீங்கள் பெரியவர் தான்.

    இந்த காலத்தில் சிறுவன் ஆன்மீக சிந்தனையுடன் இருப்பது நல்லது.

    மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. //@கேஆரெஸ், ஆட்டம் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேன்//

    ஆகா!
    ஒரு விளையாட்டு வீராங்கனை ஆட்டத்தில் இருந்து ஒதுங்கலாமா?

    //கடைசிக் கேள்விக்குத் தான் பதில் தெரியலை, சந்தேகம், அதையும் இப்போத் தெரிஞ்சுண்டாச்சு! எனக்கு என்ன பரிசு???//

    அட, இத்தனை பதில் சொன்ன எனக்கே என்ன பரிசு-ன்னு தெரியலை! இதுல நீங்க வேற போட்டியா? கபீரா காப்பாத்துப்பா! :)

    ReplyDelete
  26. கபீர் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி!

    சிறப்பான பணி தொடரவும்.

    ReplyDelete
  27. கே.ஆர்.எஸ் அவர்களின் முழு விளக்கங்களுடன் கேள்விகளுக்கான விடைகள் தனி இடுகையாக வெளியிடப்பட்டுள்ளது.


    இங்கே சுட்டவும்


    வெற்றிப்பெற்ற வாசகர்களுக்கும் பங்குகொண்ட வாசகர்களுக்கும் நன்றி நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி