Sunday, December 19, 2010

சிறப்பு இடுகை-6 : தொடர்ச்சி (2)

கபீரின் இராமன் (பாகம் -2)

ஆசிரியர்: திரு. சுப்புரத்தினம்

இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்படுகின்றன: ஹட யோகம், தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வது, மந்திரங்களை உச்சரிப்பது, பூஜைகள், எல்லா விதமான கர்மாக்களுமே சிக்கலே. ராம நாம உச்சாடனத்தை ஆகவே எல்லா வழிகளிலிருந்தும் சிறந்ததாக, எளிதாகப் புரிந்து கொண்டு செய்தால், மற்ற வழிகளில் உள்ள ஆடம்பரங்கள் இல்லை எனவும் தெளிந்து செயல்படலாம்.

கபீர் தனது மனதிடம் இறைஞ்சுகிறார். :
, ஏ மனமே !! எப்படி உடைபட்ட ரத்தினங்கள் ஒன்றாகத் திரள்கின்று ரத்தின மாலை ஆகிறதோ, அது போல இந்த உலகின் மாயையிலே சிதைந்து போன நீ, அந்த பரபிரும்மன் ராமனின் அம்ருத குணங்களைக்கேட்டு, அவற்றையே பாடி மகிழ்வாய்,

ராமனையே ஸ்மரித்து ராமனிடமே நிலைத்து ராமனாகவே ஆவாய்.

कबीर् राम् रिझाड् लै, सुखि अम्र्रुत् गुण् गाइ
फूटा नग ज्यूम् जोडि मन्, सनधि मिलाइ

இது ஜீவாத்மா தனது மாயையைக் களைந்து தனது உண்மை சொரூபத்தினை உணர்வது. பரமாத்மாவுடன் ராமா, ராமா என உன் உதடுகளால் ராம மந்திரத்தை உச்சாடனம் செய். மனதிலே ராமனை இருத்து. ராமன் ஒரு சமுத்திரம்.அகண்ட சாகரம். கடக்க இயலாத கடல். அங்கே, அக்கடலிலே ஆனந்த அலைகள் எப்பொழுதுமே எழும்பி எழும்பி உத்சாகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வலைகள் முன்னே அன்னிய தேவதைகள், கடவுளர் சின்னஞ்சிறிய‌ குளங்கள் போலவோ இருப்பர் !! கடலின் சக்திக்குமுன்னே குளங்கள் எம்மாத்திரம் ? ஆகவே ராம நாமம் ஒன்றினால் மட்டுமே உண்மையான இன்பம் பெற இயலும்.


ராமா நீ சமானமெவரு ? பிரியா சகோதரிகள் குரலில் தியாகராஜரது பாடல்
ராகம்: கரஹரப்ரியா
Get this widget | Track details | eSnips Social DNA


(Rama,you glorified Raghu dynasty. Who can be equal to you?
Your beloved wife Sita is slender like the fragrant majoram(maruvam) She is
devoted to you like a pet parrot.
You are fortunate to have brothers whose talk is gentle and sweet like
honey drops.You are the most precious jewel of your lineage. Your speech
is refined,gentle and sweet.)

कबीर् राम् ध्याइ लै, जिभ्या साऔ करि मन्त्
हरि सागर् जिनि बीसरै, छीलर् देखि अनन्त्

அந்த ராஜ்ஜியம் உனக்கு கிடைத்துவிடின், உனது இகலோக கவலைகள் எதுவுமே இருக்காது. உண்மையான இன்பம்,உண்மையான சாம்ராஜ்யம் எது என உன் மனசுக்குப் புரிந்துவிடும் என்று சொன்னவர் கபீர்.


ராம பக்தி சாம்ராஜ்ய என்று தியாகராஜர் பாடியது நினைவில் வருகிறது.‌

[ராம பக்தி சாம்ராஜ்யம் நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணா பாடுகிறார். சுத்த பங்காள ராகம்]
Get this widget | Track details | eSnips Social DNA


இன்று எல்லாத்தொல்லைகளிலிருந்தும் விடுபட ராம ஜெபம் ஒன்றே வழி.
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

நம்மிடையே, இந்நாட்களில், ஆன்மீக உபன்யாசம் செய்யும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் சொல்வதைக் கேட்போமா ?

இன்றைய தேதியிலே, ராம ராம் என்று உச்சாடனம் செய். அது போதும்.ராம பஜன் ஒன்று மட்டுமே உண்மையான பஜன் என்பார் கபீர். இதை விடுத்து மற்ற மார்க்கங்கள் தேவையில்லாத கஷடங்களையே தருகின்றன.இறைவனின் உண்மையான பக்தனுக்கு அவனது பெயரின் நினைவு ஒன்று தான் இருக்கிறது,உலகத்தைப் பற்றியநினைவு இல்லை. ராமா ராமா என அழைத்தே, அவன்
நினைவிலே இருந்து ராம பக்தர்கள் ராம மயமாகின்றனர்.

இனி யார்முன்னே பக்தன் தலை வணங்குவான் ?

பக்தனும் இறைவனும் ஒன்று படும் வேளையிலே, " நான் " என்பது இல்லை. " நான்" இருந்த‌ இடமெலாம் " நீயே" . அது நீதான்.. ( தத் த்வமஸி) காணப்படுகிறது.

ஸ்ரீ ராமசந்திர கிருபாளு பஜ்மன என்கிற பிரசித்தமான பாடல் அனுராதா பதுவாள் அவர்கள் குரலில் [Sri Ramachandra kripalu bhaj man...anuradha patwal
ततम् तिलक लोक मै, राम् नाव् निज सार्
जन कबीर मस्तक दिया, सोभा अधिक अपार‌

ராம நாமம் ஒன்றே வேத உபனிஷத்துகளின் ஸாரம் . இந்த நாமமே மூவுலகங்களின் தத்வ மயமான திலகமாகும். கபீர் சொல்வார்: இந்த ராம நாம திலகத்தை எனது நெற்றியிலே இட்டுக்கொண்டு, எல்லா தேஜஸும் ஒளியும் என்னிடம் பிரகாசிக்க கண்டேன்:


பலுகே பங்காரமாயின - உன்னிகிருஷ்ணன் அவர்கள் குரலில்
Get this widget | Track details | eSnips Social DNA


ராமனுக்குத் தந்த உள்ளம் வேறு ஒருவரையும் கொள்வதில்லை.
कबीर सुमिरण सार है, और सकल जम्जाल
आदि अति सब सोधिया दूजा देखौ काल‌

च्य्न्ता तौ हरि नौ की, और् न चिन्ता दास‌
जे कुछ् चिम्तवै राम् बिन, सोइ काल कौ पास‌

ஒரு உண்மையான பக்தனுக்கு ஏதேனும் சிந்தனை இருப்பதென்றால், அது ராமனைக் குறித்த சிந்தனையே. மற்ற எதிலுமே அவன் மனம் லயிப்பதில்லை. தன்னைப்பற்றியோ, தனது குடும்பத்தைப்பற்றியோ அவனுக்கு கவலை இல்லை. அவன் ஒரே எண்ணத்தில் இருக்கிறான். ராம நாமத்தின் உள் இருக்கும் தத்வத்தை, மர்மத்தைப் புரிந்து, அந்த விராட் ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதில்லே கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ராமன் இல்லை என்று ஒரு எண்ணம் இருந்தால் அதுவே மிருத்யுவின் ஜாலம் அது தன்னை கர்மங்களின் வலையில் தள்ளிவிடும், அவ்வலையிலே சிக்கி எல்லா உலகங்களையும் சுற்றி சுற்றி , அவ்வப்பொழுது பிறந்து இறந்து தொடர் வினையை அனுபவிக்கிறான்.


நான் எல்லா சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து முடிவாக, ராம நாமம் எனும் ரத்தினத்தை அடைந்திருக்கிறேன், என்பார் கபீர்:

पन्च सनगी पिव पिव करै, छुठा जु सुमिरै मन‌
आइ सूति कबीर् की, पाया राम रतन

payoji maine..Ram rathan payo. by Latha Mangeshkar
rama natakathilE oru nikalchi.
அந்த ராமனைக் கண்ணாரக் கண்டேன் மதுரை மணி ஐயர் குரலில்

मेरा मन सुमिरै राम कूम, मेरा मन रामहि आहि
अब मन रामहि है रह्या , सीस नवावौ काहि

எனது மனம் ராமா, ராமா என ராமனையே ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது ராமனே எனது மனமாகி விட்டது. மனம் ராமன் வசம் ஆனபிறகு, நான் வேறு யாரை தலை வணங்குவேன் ?


ஜகஜித் சிங்க் என்ன பாடுகிறார் ?

ஹரி அல்லால் வேறு யார் துணை ( ஹரி பின் கோன் சஹாய் ) என்னும் பொருளில் துவங்கும் கபீரின் பாடலை ஜகஜித் சிங் குரலில் இங்கே :


तू तू करता तू भया, मुझ मै रही न हूम्
वारी फेरी बलि गयि, जित् देखो तिह तू

ஆஹா ! ராமா ராமா என உன்னையே நான் ஸ்மரிப்பதால், நான், எனது என்று ஒன்றுமே இல்லை. நான் என்பது எதுவோ, எனது என்பது எதுவோ அவையெல்லாம் உன் நாம ஸங்கீர்த்தனத்தில் நிவேதனம் செய்யப்பட்டு என்னால் தியாகிக்கப்பட்டு விட்டன, இப்பொழுது நான் எங்கு பார்த்தாலும், ராமா ! நீயே அங்கு இருக்கிறாய் !!


என்பதாகவும் மற்றும்,

कबीर् निर्भै राम जपि, जब लगि दीवै बाति
तेल घटया बाती बुझी, तब सोवेगा दिन राति

ராம நாமத்தை உனது உடலில் உயிர் உள்ளவரை ஜபித்துக்கொண்டே இரு.
அது உன்னுடைய எல்லா பயங்களையும் போக்க வல்லது. எண்ணை இருக்கும் வரை தீபம் சுடர் விட்டு பிரகாசிப்பது போல , உன் உடலில் உயிர் உள்ளவரை நீ நிர்பயமாக, ஒளி விடுவாய். உன் உடல் மரிக்கும்பொழுது நீ கவலையிலாது நிரந்தரமாக அமைதியாகத் தூங்குவாய்
.

என்றும் ராமநாமத்தின் மகிமையைப் போற்றுகிறார்.

இத்தனை சொல்கிறோமே ? இன்னும் ஜனங்கள் என்னைப் புரிந்துகொண்டு, ராம ஜபத்தினைத் துவங்க வில்லையே என்ற கவலை கபீருக்கு. கதறுகிறார். கூக்குரல் இடுகிறார்.

लूटि सकै तो लूटियो, राम नाम है लूटि
पीछी ही पछिताहुगी, यहु तन जेहै छूटि


ஒ ஜனங்களே !! வாருங்கள்.ராம நாமம் எனும் அகண்ட கஜானா எல்லோரும் வந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அது காலியாகிவிடப்போகிறது. நீ உனது மன உறுதியும் சக்தியும் ஒருங்கே இணைத்து, சீக்கிரமே எத்தனை முடியுமோ அத்தனை அந்த கஜானாவிலிருந்து ராம நாமத்தை எடுத்துக் கொள். ஸ்மரணை செய்யத் துவங்கு. இறப்பு என்று வந்து காலன் உனது உயிரை தச த்வாரங்களிலிருந்து எடுத்துச் சென்றபின்னே உன்னால் ராம நாமம் ஸ்மரணை இயலாது.

பத்தாம் திருமொழி என்ன சொல்கிறது?

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
.

அது மட்டுமல்ல,

कबीर आपण राम कहि, औरो राम् कहाइ
जिहि मुखि राम न उचरे, तिहि मुख् फेरि कहाइ

நீ மட்டும் ராம நாமத்தைச் சொல்வதில் திருப்தி அடையாமல், மற்றோரையும் ராம நாம ஜபத்தில் ஈடுபடுத்து. உன்னால், ராம நாமத்தை ஜபிக்க இயலாது போனாலும், மற்றவர் ஜபிக்க நீ காது கொடுத்துக் கேட்கலாம். ராம ஜபத்தில் ஈடுபடலாம் என்று கபீர் சொல்கிறார்.


ராமா ! உன் பெயரைச் சொன்னாலே என் உள்ளம் மகிழ்கிறது. உடல் புல்லரிக்கிறது. நீ உருவமுடன் என்முன் ஒரு கோதண்ட ராமனாக வந்தாலும் சரி, உருவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பர பிரும்மமாக இருந்தாலும் சரி, எனக்கு அருள் புரிவாய். என் பிறவிக்கடலை நீந்தி அக்கரை சேர துணை நிற்பாய்.

जैसे माया मन् रमै, यू जे राम रमाइ
तौ तारा मन्डल् छान्डि करि, जहान् के सो तहान् जाइ.

ராம பக்தனே !! உலகத்தே இருக்கும் யாவையும் ஜீவன் உட்பட, மாயையில் முழுகி உள்ளதோ, அது போல, நீ ராமநாமத்திலே சங்கமமாகி விடு. நக்ஷத்திர மண்டலங்களுக்கப்பாலே கேசவன் இருக்கும் இடத்தை நீ அடைவாய். ஊர்த்வகமனம் செய்து நக்ஷத்திர மண்டலத்துக்கும் மேலே உள்ள ஸூன்ய சக்ரத்தை அடைந்து பரமாத்மாவுடன் ஐக்கியமாய். தன் பிறவிப்பயன் அடைவாய். அழியாப் புகழ் அடைவாய்.


---------------------------------------------------------------

ராம நாமத்திலே சர்வமும் அடக்கம் என்று கபீர் சொன்னதை அழகாக படம் பிடித்து நமது மனங்களில் ஒட்ட வைத்து விட்டார் சுப்புரத்தினம் சார். கபீரின் (ஈரடி) அருள் மழை இன்னிசை தென்றலுடன் மிகவும் சோபித்தது. மிகவும் சுகமான ஒரு வாசிப்பு. அவருக்கு அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி. அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் தந்து இறைவன் அவரை நமக்கு தொடர்ந்து வழிகாட்ட வழி செய்யட்டும்.

இன்று கர்நாடகமெங்கும் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமனை விட சிறந்த ராம பக்தன் உண்டோ ? வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கிய ’கபீரின் இராமன்’ பற்றிய இடுகை ஹனுமத் ஜெயந்தி அன்று நிறைவடைவது இன்னமும் விசேஷம் அன்றோ!

சத்சங்கத்திலே கூட்டுப் பிரார்த்தனைக்கு விசேஷ இடம் உண்டு. வாருங்கள் நாமும் சேர்ந்து கொள்வோம் இந்த ராம நாம ஜெபத்தில்.


ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்.

15 comments:

 1. //அந்த ராஜ்ஜியம் உனக்கு கிடைத்துவிடின், உனது இகலோக கவலைகள் எதுவுமே இருக்காது. உண்மையான இன்பம்,உண்மையான சாம்ராஜ்யம் எது என உன் மனசுக்குப் புரிந்துவிடும் என்று சொன்னவர் கபீர்.//

  ராம நாமம் எனும் ரத்தினம் கிடைத்த பின் வேறு என்ன வேண்டும்!

  தொண்டரடிப் பொடியாழ்வார் ஆயர்தம் கொழுநதை பாடும் சுவையை விட இந்திரலோகம் ஆளும் சுவை ஒன்றும் இல்லை. என்று அரங்கனிடம் சொன்ன மாதிரி ராம நாமம் தொடர்ந்து சொல்பவருக்கு எது முக்கிய தேவை என்பது தெரிந்து விடும்.

  ராமநாமம் சொல்லும் இடங்களில் அனுமன் இருப்பார் எனச் சொல்வார்கள். இன்று அனுமன் ஜெயந்தி இன்று அவர் இந்த பதிவை படிப்பவருக்கு எல்லா நலன்களைத் தருவார்.

  இந்த பதிவை வைகுண்ட ஏகாதசியில் ஆரம்பித்து அனுமன் ஜெயந்தியில் முடித்த சூரி சாருக்கு எல்லா நலன்களை அனுமனும்,அவர் மார்பில் உறையும் ராமனும் அருள்வார்.

  ReplyDelete
 2. கூட்டுப் பிராத்தனைக்கு நல்ல பலன் உண்டு.

  எல்லோரும் சொல்வோம்.

  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!

  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்.

  ReplyDelete
 3. துளசிதாஸரின் ஸ்ரீ ராமசந்த்ர கிருபாளு பஜமன என்று துவங்கும் பிரசித்தமான பாடலின் வரிகளையும் சுப்புரத்தினம் சார் கொடுத்திருந்தார். அதை தனியாக பின்னூட்டத்தில் இடலாமென்று வைத்திருந்தேன். பாடல் பிடித்திருப்பவர்களுக்கு அதன் வரிகள் கீழே :

  Shriramachandra kripalu bhaju mana harana bhavabhaya darunam,
  Navakanja-lochana, kanjamukha kara kanja pada kanjarunam.

  Kandarpa aganita amita chavinava neela-neeraja sundaram,
  Pata peeta manahu tadita ruchi shuchi noumi, janaka sutavaram.

  Bhaju deenbandhu dinesha danava-daitya-vansha-nikandanam,
  Raghunanda anandakanda koshala chandra dasharatha-nanadanam.

  Shira mukuta kundala tilaka charu udaru anga vibhushanam,
  Aajaanubhuja shara-chaapa-dhara, sangrama-jita-khara dushanam.

  Iti vadati tulasidasa shankara-sesha-muni-mana-ranjanam,
  Mama hridaya kanja-nivaasa kuru, kaamaadi khala-dala-ganjanam

  நன்றி

  ReplyDelete
 4. ராம நாமத்தின் மேன்மையை அழகுறச் சொல்லியிருக்கிறார் சுப்புரத்தினம் சார்.

  ராமஜெயம் எழுதும் வழக்கமுண்டு.

  சுப்புரத்தினம் சார் அருமையான பதிவை இங்கே அளித்திடக் காரணமான கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 5. ராம நாம சங்கீர்த்தனம் அருமை!
  சங்கீர்த்தன நிவேதனத்திற்கு நன்றிகள்!
  பிரசாதம் கிடைக்கப்பெற்றேன்!

  ReplyDelete
 6. துப்புடை யாரை - பாசுரத்தை பார்த்தவுடன் அது கே.பி.எஸ் அவர்களில் குரலில் காதுகளில் ஒலிக்கிறது!

  ReplyDelete
 7. கபீர் போற்றும் ராமநாமமும் - நமது இசையும் போற்றும் ராமநாமும் ஒன்றேயாம் - ஒன்றெயென இருக்கும் பரமனின் புகழ் பாடும் இரத்தினப் பிரகாசம்!

  ReplyDelete
 8. மும்மைசார் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
  தம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே
  இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை 'ராம' எனும்
  செம்மை சேர் நாமம் தன்னை கண்களால் தெரியக் கண்டான்.

  -- கவிச்சக்ரவர்த்தி

  ReplyDelete
 9. கருத்துக்கள் இட்ட
  திருமதி கோமதி அரசு
  திருமதி இராமலக்ஷ்மி,
  திரு கபீரன்பன்,
  திரு ஜீவா அவர்கட்கு எனது
  நன்றி.

  " பிறக்கும்பொழுது நீ அழுதாய், உன்னைச் சுற்றிலும் இருந்த யாவருமே மகிழ்ந்தனர்.
  இறக்கும்பொழுது நீ மகிழ உன்னைச் சுற்றியுள்ளவர் யாவரும் நெஞ்சார அழ,
  வாழ்க்கையிலே என்னென்ன செய்யவேண்டுமோ, அதை அன்று செய்யலாமென
  இல்லாது இன்றே செய்,இப்பொழுதே செய்"

  என்றார் கபீர்.

  கபீரன்பனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கபீர் வலைப்பதிவுக்கு வரும் எல்லா நல்ல‌
  உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 10. //ஏ மனமே !! எப்படி உடைபட்ட ரத்தினங்கள் ஒன்றாகத் திரள்கின்று ரத்தின மாலை ஆகிறதோ, அது போல இந்த உலகின் மாயையிலே சிதைந்து போன நீ, அந்த பரபிரும்மன் ராமனின் அம்ருத குணங்களைக்கேட்டு, அவற்றையே பாடி மகிழ்வாய்,//

  ஆஹா, அருமை. நாமம் சொல்லி நன்மை பெறுவோம்.

  வணக்கங்களுடன், நன்றிகளுடன்...

  ReplyDelete
 11. எங்கெலாம் ராம நாம ஸங்கீர்த்தனம் நடக்கிறதோ அங்கெலாம் அனுமன் ப்ரஸன்னமாகி
  ஆனந்த பாஷ்பவாரி பொழிந்துகொண்டு வரும் பக்தர் கூட்டத்தை ஆசிர்வதித்துக்கொண்டு இருக்கிறார்
  என்பதே நமது நம்பிக்கை.

  யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம், தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
  பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

  ஹனுமத்ஸ்லோகத்துடன் இந்த பதிவு நிறைவு பெற்றதும் அனுமனின் அருளே.

  ஜீவி, ஜீவா, ராமலக்ஷ்மி, கவி நயா, கோமதி அரசு, மற்றும் இப்பதிவின் ஆசிரியர் கபீரன்பன்
  அவர்களுக்கும் எனது நன்றி.

  ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து.
  \
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 12. எல்லா பாடல்களும் அருமை. ஜகஜித் சிங்க் பாடுவதை மட்டும் கேட்க முடியவில்லை.
  ["Transferring widget" என்று சாக்கு சொல்லி அப்படியே என் வலையூர்தி உறைந்து போய்விட்டது.]
  ரொம்ப நன்றி சுப்பு தாத்தா.

  ReplyDelete
 13. @ Radha

  பிரச்சனையை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. ஒலி-ஒளி கோப்புகளை வெறும் ஒலிக் கோப்புகளாக மாற்றிக் கொடுத்தால் தரவிறக்க அளவு மற்றும் நேரம் குறைவதோடு இடுகையின் நீளமும் குறையும் என்ற எண்ணத்தில் சுப்புரத்தினம் சார் கொடுத்திருந்த பல youtube இணைப்புகளை மாற்றியமைத்தேன்.

  காப்புரிமை காரணம் காட்டி ஜகஜித்சிங் பாடலை மட்டும் e snip நிராகரித்து வந்தது. கடைசியில் tag-line-ல் கபீர் ஜகஜித்சிங் பெயர்களை போடாமலே ஃபைல் பெயரையும் மாற்றி வலையேற்றினேன். அப்படியும் அதைக் கண்டுபிடித்து நீக்கி இருக்கிறார்கள். :(

  இப்போது யூட்யூபின் இணைப்பையே கொடுத்து விட்டேன். இணைப்பு வேலை செய்கிறது.பாடலைக் கேட்டு மகிழவும். இங்கே காப்புரிமை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை போலும்!!

  ReplyDelete
 14. ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம். ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

  என்ன சொல்றது?? அருமை, அற்புதம்னா வெறும் பேச்சாயிடும்.

  ReplyDelete
 15. ஓ! மிக்க நன்றி. இன்னும் பாடலை கேட்கவில்லை.இனி அடுத்த ஞாயிறு தான்.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி