Monday, April 06, 2009

ராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்

கோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவார்கள்.

சாப்பிடுபவர்களும் தத்தம் மனநிலைக்கு ஏற்றபடி சிலவற்றை ருசித்தும் சிலவற்றை ஒதுக்கியும் வயிறை நிரப்பிக் கொள்கிறார்கள்.

ஒருவன் பிரட் தயாரிப்பதில் மன்னன். சிறப்பான பிரட் தயாரித்து வைத்திருக்கிறான். ஆனால் பிரட் பிடிக்காத அன்பர்கள் அதை விட்டு சப்பாத்தியே பரவாயில்லை என்கிறார்கள். ”கை கொடுத்த தெய்வம்” படத்தில் சிவாஜி போல் சப்பாத்தியை கண்டு முகம் சுழிப்பவர்கள் அதே கோதுமை மாவை நீரில் கரைத்து தோசையாக வார்த்துத் தின்னத் தயாராகிறார்கள். இன்னும் சிலர் கோதுமையை உப்புமாவாக்கி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்!

எப்படியோ கோதுமை உடலுக்கு ஊட்டம் தருவது. எந்த வடிவில் உள்ளே போனால் என்ன? நல்லது தானே செய்யும்.

இந்த முறை உங்களுக்கெல்லாம் கபீரின் கனிமொழியை இசை விருந்தாக படைக்கலாம் என்று ஒரு எண்ணம்.

கபீரின் பாடல் ஒன்று இங்கே பல கலைஞர்களின் கையில் சிக்கிக் கொண்டு பலவிதமான ருசிகளை கொடுக்கிறது. ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த (அல்லது தெரிந்த) பாணியில் வடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நான் வெறும் மெனு கார்டை நீட்டும் சாதாரண ஊழியன். எல்லாவற்றையும் ருசித்து எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது கங்கை கரை கோதுமையில் வளர்ந்த ஆன்மீகம். எந்த வகையில் ருசித்தாலும் ஆன்ம பலம் கூடும் !!

முதலில் பாடல் :

भजो रे भैया (मन) राम गोविंद हरी ।
राम गोविंद हरी भजो रे भैया राम गोविंद हरी ॥
जप तप साधन कछु नहिं लागत, खरचत नहिं गठरी ॥
संतत संपत सुख के कारन, जासे भूल परी ॥
कहत कबीर राम नहीं जा मुख, ता मुख धूल भरी ॥


இந்தி அறியாத அன்பர்களுக்காக ஆங்கில வடிவில்,தமிழில் பொருளுடன் :)

bahajo re bhaiya raam govind hari
துதித்திடு அன்பனே, ராமா, கோவிந்தா, ஹரி (என்றே துதித்திடு)

jap thap saadhan nahi kuch laagath, kharachath nahIm gatarI |
ஜபம் தவம் சாதனை வேண்டாம், செலவும் இதற்கு கிடையாது

santhath sampath sukh ke kaaran, jaase bhool parI |
சந்ததியென்றும் சம்பத்து என்றும் சுகத்தின் காரணமான அவனையே மறந்தனையே

kahath kabeer raam nahIm jaa mukh, thaa mukh dhool baharI ||
சொல்வனே கபீரும் இராமனை செபிக்காத உதடுகள் தூசி படிந்த உதடுகளாகும்
_______________________________________________________



புருஷோத்தம் தாஸ் ஜலோடா.

______________________________________
முகமது ரஃபி பாடியது :



இவர் பாடலில் ”பையா” என்பது ”மன்” என்று மாற்றப்பட்டுள்ளது. அது போலவே நடுவில் ஒரு வரி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது
______________________________________________

ஜகஜித் சிங்
________________________________________________________
ராகுல் வெள்ளால்

>

இந்த மகத்தான கலைஞர்களுக்கு வந்தனம். ரஃபி, எம்.எஸ் மற்றும் பெயர் தெரியாத கலைஞர்கள் பாடியவற்றை வலையேற்றம் செய்து வைத்திருக்கும் அன்பர்களுக்கும் மனதார நன்றி

இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் 13/05/2018 அன்று புதிப்பிக்கப்பட்டுள்ளது. சில பழைய இணப்புகள் செயலற்று போன காரணத்தால் இது தேவை பட்டது

23 comments:

  1. कारन,=कारण??????

    இப்போத் தான் கோதுமை மாவைப் பிசைந்து வச்சுட்டு வந்தால் அதைப் பத்தியே எழுதி இருக்கீங்க! பாட்டுக் கேட்க முடியலை, கேட்டுட்டு வரேன், எக்ஸ்ப்ளோரரில் தான் கேட்கணும், நெருப்பு நரியிலே வரலை! :((((((

    ReplyDelete
  2. வாங்க கீதா மேடம் :)

    //कारन,=कारण?????? //

    அது பாமரரின் பேச்சு வழக்கை ஒட்டி வருவது.

    //நெருப்பு நரியிலே வரலை!:(((((( //

    என்னோடதும் நெருப்பு நரி 3.07ன்னு நினைக்கிறேன். சரியாத்தானே வருது.
    உங்களுக்கு ஏன் பிரச்சனை ?

    மிச்சத்தை பாடல்களை கேட்டதன் பின் சொல்லவும் :)

    ReplyDelete
  3. ire fox இல் நன்றாகத்தானேவருது?
    கோதுமை மாவிலே, அல்வா, சப்பாத்தி, உப்புமா, பூரின்னு எல்லாமே பண்ணி திருப்தியா சாப்பிட்டாச்சு.
    அன்னதாதா சுகீ பவ!

    ReplyDelete
  4. நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்

    //...எல்லாமே பண்ணி திருப்தியா சாப்பிட்டாச்சு //

    என்னைப் போலவே சர்வ பட்சிணியா :)

    //அன்னதாதா சுகீ பவ! //

    கிச்சன்-ல கஷ்டபட்டது யாரோ டிப்ஸ்-ஸ பாக்கெட்-ல போட்டுக்கறது யாரோ :))))

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  5. தொய்வில்லாமல் அடியார் குழாத்துக்கு அன்னம் பாலித்துவரும் உங்கள் தொண்டு மேலும் சிறப்பதாக.
    அன்பர் கூறியதை வழி மொழிகிறேன்,
    अन्नदाता सुखी भव !

    தேவ்

    ReplyDelete
  6. வருக தேவராஜன் ஐயா

    //...அடியார் குழாத்துக்கு அன்னம் பாலித்துவரும்.. //

    अतिथि देवो भव ।

    தங்களைப் போன்ற சிறந்த வாசகர்களின் வாழ்த்துரையே இறைவனின் ஆசியுரை !

    என்றும் கடமைப்பட்டிருப்பேன். நன்றி

    ReplyDelete
  7. ஆஹா ! அற்புதமான பாடல். இந்த பாடலை பாடாத நாளும் உண்டோ !
    பாடாத நாவும் உண்டோ ! கேளாத செவியும் உண்டோ ?

    ராம் நாம் மணி தீப் தரு என ஒரு தோஹா வரும். ராம நாமத்தை உனது உத்டுகளில்
    வைத்துக்கொள் என்பார். உதடுகளில் சதா சர்வதா அனந்தமும் உச்சரிக்கப்படும் அந்த‌
    புனித ராம நாமம், உனது உள்ளேயும் வெளியேயும் உன்னை பிரகாசிக்கச்செய்யும், உன்னை
    நிர்மலமாக்கும் எனற கருத்துடன் அந்த தோஹா இருக்கும்.

    அதி காலைப்பொழுது இப்பொழுது. காலையில் எழுந்து ராம நாமத்தை உச்சரிக்கச்செய்து,
    ராம நாம் ஹரி பாடலைப் பாடச்செய்தது கபீரன்பனா அல்லது ராம பிரானே கபீரன்பனின்
    உருவில் வந்தாரா !

    ராம் ராம் ராம் ராம் !
    இப்பாடலை நான் பாடியது எனது வலையில் காணலாம்.

    சுப்பு ரத்தினம்.
    ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்

    ReplyDelete
  8. कारन,=कारण??????
    கபீரின் கால வாய்மொழியில் ண் உச்சரிப்பில்லை. ஆகையால், ண் வில் முடியும் பல‌
    வார்த்தைகள் ன் ல் முடியும்.

    அதே பொருள்தான்.

    நிற்க. அந்த க்காலத்தில்,
    1960 வருடங்களில் வேதாரண்ய குருகுலத்தில் ஹிந்தி ஆசிரியராக இருக்கும்பொழுது, இந்த பாடலை
    பஜன்களில் நான் பாடியதும் நினைவும் வருகிறது.

    அனூப் ஜலோடா, பங்கஜ் உதாஸ், மற்றும் அனுராதா, கவிதா க்ருஷ்ணமூர்த்தி ஆகியோரும்
    இப்பாடலை அனுபவித்து பாடியுள்ளனர்.

    ஏன்! லதா மங்கேஷ்கரின் குரல் இப்பாடலில் அற்புதம் !

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  9. வருக சுப்பு ரத்தினம் ஐயா,
    தங்கள் மேலான குறிப்புகளுக்கு நன்றி.

    //ராம் ராம் ராம் ராம் !
    இப்பாடலை நான் பாடியது எனது வலையில் காணலாம் //

    தாங்கள் பல வலைப்பூக்களை நிர்வகிப்பதால் எந்த தளம் என்ற
    சுட்டியையும் கொடுத்திருந்தால் வாசகர்களுக்கு உபயோகமாயிருந்திருக்கும். :)

    மிக்க நன்றி

    ReplyDelete
  10. மீனாட்சி பாட்டிக்கு நமஸ்காரம்.

    தாங்கள் குறிப்பிட்ட படி பலரும் விரும்பி பாடும் அளவுக்கு மிகப் பிரபலமான பாடல் தான் இது. ஆனால் பாடுகின்ற முறையில்தான் எவ்வளவு வேறுபாடு ! பண்டிட் D.V.பலுஸ்கர் முறையான ஹிந்துஸ்தானி ராகத்தில் பாடியிருக்கும் சுட்டியும் கிடைத்தது. ஆனால் ஒலிப்பதிவு சரியின்மையால் இணைக்கவில்லை. அவற்றை
    பின்னர் எப்போதாவது ஒரு பதிவில் காண்போம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. சுப்புரத்தினம் ஐயா தங்கள் பாடலை ஆன்மீகம் வலைப்பக்கத்தில் கண்டேன். தாங்கள் பாடியிருப்பது தர்பாரி கானடா என்று நினைக்கிறேன். இந்த பாடலுக்கு பொருத்தமான ராகமே. படங்களின் இணைப்பும் பிரமாதம்.
    நன்றி

    ReplyDelete
  12. அருமை கபீரன்பன் சார். பாடலைக் கேட்டேன்...அப்படியே ஹம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். :)

    ReplyDelete
  13. ந்ன்றி மதுரையம்பதி,

    //கேட்டேன்...அப்படியே ஹம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். :) //

    நாலு பாட்டுல எதுன்னு சொல்லலையே !! எனக்கு ரொம்ப பிடித்தது முகமது ரஃபி

    ReplyDelete
  14. //என்னோடதும் நெருப்பு நரி 3.07ன்னு நினைக்கிறேன். சரியாத்தானே வருது.
    உங்களுக்கு ஏன் பிரச்சனை ?
    //
    ஏன்னா அது அவங்களோட நெருப்பு நரி!:P:P
    இன்னுமோர் நல்ல பதிவு!
    நன்னி!

    ReplyDelete
  15. //ஏன்னா அது அவங்களோட நெருப்பு நரி!:P:P//

    grrrrrrrrrrrrrrrrr java script update pannalai, athanal varalai! update panniyum varalai, athu vere vishayam! :))))))

    ReplyDelete
  16. வருக திவா சார்,

    பாராட்டுக்கு நன்றி,

    க்ர்ர்ர்ர்ர்ர் கீதா மேடம் ! பாட்டு கேட்டால் டென்ஷன் எல்லாம் கொறையுமாம்.

    ///update panniyum varalai, athu vere vishayam! :))))))///

    அடுத்து என்ன பண்ணனுமாம் நெருப்பு நரியை பாட வைக்க ?:))

    ReplyDelete
  17. //அடுத்து என்ன பண்ணனுமாம் நெருப்பு நரியை பாட வைக்க ?:))//

    will change to explorer and enjoyyyyyyyyyyyyyy!!!!!!!!

    ReplyDelete
  18. //எந்த வடிவில் உள்ளே போனால் என்ன? நல்லது தானே செய்யும்.//

    பலன் துய்த்து இன்பத்தில் திளைத்தோம். தங்களின் அருட்கொடைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. நன்றி ஜீவி ஐயா,

    தங்களுக்கு பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  20. ஆஹா எவ்ளோ பெரிய விருந்து இத்தனைநாள் கழிச்சு வந்ததுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு (சில வேலைகள்!!!!)... ரொம்ப நன்றி எல்லாப்பாட்டுமே ரொம்ப நல்லாருக்கு... டவுன்லோட் கிடைக்குமான்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்... கிடக்கலேன்னா திரும்ப வரேன்... கொஞ்சம் ஷேர் பண்ணுவீங்களா.....

    ReplyDelete
  21. நன்றி கிருத்திகா.

    டௌன்லோட் செய்ய முடியவில்லை யென்றால் தெரிவியுங்கள். நான் முயற்சி செய்து தெருகிறேன். ஓ.எஸ் அருண் என்னிடம் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமானாலும் ( மே 10 ஆம் தேதிக்கு பிறகு) அனுப்ப முடியும்.

    ReplyDelete
  22. இவ்வன்டை மயக்கிய தேன் நிறைந்த வலைப்பூ! உங்கள் பணி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. வருக அருண்,
    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடிக்கடி வருக

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி